உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு – சந்தேக நபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த சம்பவத்தில் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

-பிரதீபன்

Related posts

மன்னார் – புத்தளம் பாதை முக்கியமானது – பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் | வீடியோ

editor

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு

நாமல் எம்.பியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

editor