உள்நாடுபிராந்தியம்

புற்றுநோய் தொடர்பான விரிவான வழிகாட்டல் மூதூரில் சிறப்பாக இடம்பெற்றது

புற்றுநோய் தொடர்பாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான முழுமையான வழிகாட்டல், ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கும் நோக்கில், மூதூர் மெடிக்கல் கொமியுனிட்டி 3CD நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கருத்தரங்கு இன்று (08) சனிக்கிழமை மூதூர் பேல்கிரண் விழா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பொது மக்களிடையே புற்றுநோய் குறித்த தவறான எண்ணக்கருவுகள், பயங்கள் மற்றும் சிகிச்சையை தாமதப்படுத்துதல் போன்ற சிக்கல்கள் அதிகரித்து வருவதையொட்டி, சரியான மருத்துவ அறிவுரைகளை வழங்குவதை இந்நிகழ்வு முக்கிய இலக்காகக் கொண்டது.

இந்நிகழ்வில் புற்றுநோய் தொடர்பான உயர்தர மருத்துவ நிபுணத்துவம் பெற்ற, பல்வேறு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை வழங்கிய பிரபல வைத்திய நிபுணர் ஏ.ஜே.ஹில்மி (MBBS) அவர்கள் முக்கிய உரையாற்றி,

மேலும், நோயாளிகள் நேருக்கு நேர் சந்தித்து, தனிப்பட்ட சந்தேகங்களை கேட்டு ஆலோசனை பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மூதூர் மற்றும் சுற்றுவட்டார பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள், நோயாளிகள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றி பயனடைந்தனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

editor

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு – இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

editor

அஷ்ரபை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, உடன் ஹரீஸ் எம்.பி. கைவிட வேண்டும் – ஆசாத் சாலி