நிவ்யோர்க் மேயர் தேர்தலில் சொஹ்ரான் மம்தானியின் வெற்றியால், அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிவ்யோர்க், சின்சினாட்டி நகரங்கள், வேர்ஜீனியா, நிவ்ஜேர்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முதல் மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நிவ்யோர்க் நகர மேயர் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி முஸ்லிம் சொஹ்ரான் மம்தானி (வயது 34) வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ட்ரம்ப், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தல் ஊடாக அமெரிக்க மக்கள் எங்கள் அரசாங்கத்தை அமைத்தனர்.
நாங்கள் அமெரிக்காவின் இறையாண்மையை மீட்டெடுத்தோம். நேற்று முன்தினமிரவு நிவ்யோர்க்கில் நாம் இறையாண்மையை சிறிது இழந்துள்ளோம்.
ஆனால், அதை சரிசெய்து விடலாம்.ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவுக்கு என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டுமானால், நிவ்யோர்க் தேர்தலின் முடிவுகளைப் பாருங்கள்.
நாட்டின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக ஒரு கம்யூனிஸ்ட்டை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர். எனத் தெரிவித்தார்.
-பொக்ஸ் நியூஸ்
