எதிர்வரும் பாடசாலை விடுமுறை மற்றும் உற்சவ நாட்களில் பொது மக்கள் மிகவும் பாதுகாப்பு, அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் இன்று (07.11.2025) நடைபெற்ற விசேட ஊடவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
விடுமுறை மற்றும் உற்சவ நாட்டிகளில் உல்லாச பயணங்கள் செல்லும் போது, வாகனத்தின் தன்மை, ஓட்டுனர், வாகனத்தின் இயந்திர கோளாறுகள் தொடர்பில் மிக அவதானம் செலுத்தவும்.
வாகன ஒட்டுனரின் அதிக வேகம் மற்றும் போதை பாவனை,வீதி நடைமுறைகளை மீறுதல்,கழகத்தில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளின் போது பெரியவர்கள் அல்லது பொற்றோர்கள் அவற்றை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு செல்லுதல்,வீதியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யவும்.
இவை உங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிர் பாதுகாப்புக்கு நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காரியங்களாகும்.
இந்த வருடத்தில் இது வரை 2210 வீதி விபத்துக்களில் 2343 பேர் மரணமடைந்துள்ளனர்.அத்தோடு 4380 பயங்கர விபத்துக்கள் நடந்துள்ளன.
இது தொடர்பில் பொது மக்கள் மற்றும் பொற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
இந்த காலப்பகுதிகளில் பொலிஸார் சட்டத்தை கடுமையாக கடைபிடிக்கவுள்ளனர் என்றார்.அதிக வேகம்,மது போதையில் வாகனம் செலுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
