உள்நாடு

பாடசாலை மட்ட போதைப்பொருள் சோதனைகளுக்கு பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி

பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி தேவைப்படுமாயின், குறித்த பாடசாலையின் அதிபர், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாடே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டம் அனைத்து அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் நோக்கம் நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை வேருடன் பிடுங்கி எறிவதே என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொலிஸ் நேரடியாகப் பங்களிப்பதுடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மோசடியை வேரறுக்கும் வகையில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு பொலிஸார் அனைத்து வழிகளிலும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், பாடசாலை மட்டத்திலும் அதிபர் மற்றும் பணிக்குழாமும் இணைந்து பல்வேறு போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களைப் பாடசாலைகளில் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தாருங்கள் – சஜித் பிரேமதாச

editor

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை