அரசியல்உள்நாடு

பதில் பிரதம நீதியரசராக துரைராஜா நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Related posts

பங்களாதேஷ் கலவரம் – இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களது உரிமைகளை குறைக்காது

‘நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்த ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’