உள்நாடு

தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் – மீடியா போரம் சந்திப்பு

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 06.11.2025 வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பீ.எம்.பைறூஸ் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

இச் சந்திப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மும்மொழி ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுக்கான பயிற்சி மற்றும் நலன்புரி திட்டங்கள், தகவல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக தகவல் திணைக்களமும் முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கான பல்வேறு பயிற்சிநெறிகளை முன்னெடுக்க உடன்பாடு காணப்பட்டதோடு தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் ஊடகக் கழகங்களை ஆரம்பித்து இளம் ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கவும் இணக்கம் காணப்பட்டது.

ஊடக சட்டங்கள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி, ஊடக அடையாள அட்டை விநியோக நடைமுறைகள், புலமைப்பரிசில் திட்டங்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அவற்றில் பெரும்பாலான விடயங்கள் தொடர்பில் பணிப்பாளர் நாயகம் சாதகமான பதிலை அளித்ததோடு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் நலனுக்காக முன்னெடுக்கவிருக்கும் பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

கலந்துரையாடலின் இறுதியில் பணிப்பாளருக்கு பெறுமதியான நூல் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அமைப்பின் சார்பில் தலைவர் எம்.பீ.எம்.பைரூஸ்,ஸ்தாபக போஷகர் என்.எம்.அமீன்,செயலாளர் எம்.எஸ். பாஹிம், உபதலைவர் சிஹார் அனீஸ், தேசிய அமைப்பாளர் றிப்தி அலி, உப செயலாளர்களான றம்ஸி குத்தூஸ், சமீஹா ஷபீர், உப பொருளாளர் ஏ.எச்.எம். பௌசான், இணையத்தள ஆசிரியர் றிஸ்வான் சேகு முகைதீன், தகவல் திணைக்கள அதிகாரி எஸ்.ஏ.எம். பவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Related posts

பரீட்சை திணைக்களத்தின் புதிய முடிவு!

50 லட்சம் பெறுமதியான அம்பர் வைத்திருந்த ஒருவர் கைது

editor

அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி பாரிய மோசடி

editor