உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இராணுவ வீரர் உயிரிழப்பு – மூவர் காயம்!

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப் பிரிவு முகாமில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர் குருணாகலைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் மற்றைய மூன்று வீரர்களுடன் விறகு சேகரித்துக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மாஞ்சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

பூனாகலை வனப்பகுதியில் தீ; 50 ஏக்கர் நிலம் பாதிப்பு

“வீட்டுக்கு வீடு செல்ல தயாராகும் நாமல்”

மேலும் 07 பேர் பூரண குணம்