உள்நாடு

வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது.

அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்துள்ளது.

இன்று காலை சுமார் 9.37 மணியளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டியது.

அந்த நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 23,000.54 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திலினி மோசடி வழக்கு : பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஜனாதிபதியின் மீலாத் தின செய்தி

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு