உலகம்

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவில் 6.4 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் 24 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் இது குறித்த பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கைகள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம், பசிபிக் பெரும்பகுதியைச் சுற்றியுள்ள நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் போன்றவை அடிக்கடி ஏற்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெர்மனியில் ஐயாயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

editor

காசாவில் போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!