உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்

மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார்.

கல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று (03) பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ். ஆர்.மஜிதிய்யா தலைமையில் சிறப்பாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.எச்.எம் ஜாபீர் , பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் போசாக்கு மற்றும் அவர்களின் உணவு திட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் வழங்கப்படவுள்ளதுடன் இவ்வறுவடை வெற்றி பெற காரணமான இருந்த உதவி அதிபர் , ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ,பெற்றோர் சங்கம்,அயலவர்கள் ஆகியவற்றிக்கு நன்றிகளை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தெரிவித்தார்.

மேலும் இப்பாடசாலையில் சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் அதிதிகளால் 04 தடவை உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

வீடியோ

Related posts

New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்

நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது