அரசியல்உள்நாடு

எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் எழுத்து மூலம் கோரிக்கை வைக்கலாம் – பொலிஸ் திணைக்களம்

பாராளுமன்ற உறுபினர்களுக்கு பாதுகாப்புக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல்களை ஆராய்ந்த பிறகு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை வைக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, தற்போதுள்ள அச்சுறுத்தல்களை ஆராய்ந்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்தால், அந்த பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுபினர்கள் குழுவும் தங்கள் பாதுகாப்பிற்காக ஒரு கைத்துப்பாக்கியை வழங்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கூலித்த தொழிலாளியை தாக்கிய கிராமசேவகர்!

ரிஷாத் பிணையில் விடுதலை