வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (31) உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மரணத்திற்கான சரியான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
