உள்நாடுபிராந்தியம்

காலியில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

காலியில் அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அஹூங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (31) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான உறவினர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹூங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு

குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு