உள்நாடுபிராந்தியம்

வெற்றிலை துப்ப முயற்சித்த நபர் – மாடியில் இருந்து கீழே விழுந்து பலி

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்று (31) உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 22ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், இவர் வெற்றிலை துப்புவதற்காக கட்டிடத்தின் முகப்பு பகுதிக்கு சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (31) காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

-கஜிந்தன்

Related posts

தோல்வியை ஏற்றுக்கொண்ட ரணிலுக்கும், நாட்டை கொளுத்துகின்ற அநுரவுக்கும் வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் – சஜித்

editor

‘தேசிய பேரவை’யின் உப குழுக்கள் இன்று கூடுகின்றன

கடை ஒன்றில் மதிய உணவு வாங்கிய சட்டத்தரணி – கரட் கறியில் புழு

editor