உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (31) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கவனக்குறைவாக செலுத்தப்பட்ட இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!

கடவுச்சீட்டு, வீசா விவகாரத்துக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – விஜித ஹேரத்

editor