உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – காஸா மீது தாக்குதல் – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்றைய தினம் (29) தாக்குதல்கள் நடத்தியது.

குறித்த தாக்குதல்களுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 48 குழந்தைகள் உட்பட 117 பேர் உயிரிழந்தனர் மேலும் 78 குழந்தைகள் மற்றும் 84 பெண்கள் உட்பட 253 பேர் காயமடைந்துள்ளனர்.

காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற தாக்குதலில் இஸ்ரேல் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து காஸா மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது.

Related posts

ரஷ்யாவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

editor

உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 இலட்சத்தை கடந்தது

கொரோனா தொற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை