உள்நாடுபிராந்தியம்

3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று இன்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிறந்துள்ளது.

இன்றையதினம் குழந்தையின் தாயார் குழந்தைக்கு பாலூட்டிய சிறிது நேரத்தில் அந்த குழந்தை திடீர் சுகவீனமுற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த குழந்தையை பெற்றோர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-கஜிந்தன்

Related posts

சொய்சாபுர துப்பாக்கி சூடு – வாகன சாரதி விளக்கமறியலில்

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு