உள்நாடுபிராந்தியம்

கந்தளாய், சேருநுவர வீதியில் உழவு இயந்திரமும் லொறியும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய்-சேருநுவர வீதியில் நேற்று மாலை (28) இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரத்துடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில், உழவு இயந்திரச் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் கந்தளாய் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பேராறு பகுதியிலிருந்து உழவு இயந்திரம் ஒன்று வயல் உழவுப் பணிகளுக்காக சேருநுவர வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தது.

அதேவேளை, சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு உணவு விநியோகம் செய்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த லொறி ஒன்று, கந்தளாய்-சேருநுவர வீதியில் எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதனைச் செலுத்திய சாரதி படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-கந்தளாய் யூசுப்

Related posts

அரச நிறுவனங்களுக்கு 2,000 கெப்ரக வாகனங்கள் இறக்குமதி செய்ய திட்டம் – பிரதி அமைச்சர் ருவன் செனரத்

editor

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட ப்ரியந்தவின் இறுதிக் கிரியை இன்று