உள்நாடு

பாடசாலை நேரம் நீட்டிக்கப்படும் – கல்வி அமைச்சு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், ஜனவரி முதல், தரம் 5 முதல் தரம் 13 வரை உள்ள அனைத்து வகுப்புக்களின் கற்கை நடவடிக்கைகள் பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புதிய நேர அட்டவணையில் மாணவர்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாடசாலை நேரம் பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி பிரதியமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன கூறுகிறார்.

அதன்படி, சிசு செரிய உட்பட அனைத்து பாடசாலை பஸ் சேவைகளும் புதிய நேர அட்டவணைகளின்படி திருத்தப்பட்டு இயக்கப்படும் என்று பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் பாதிப்பு

editor

9A சித்தி மாணவர்கள் தவிசாளர் மாஹிரால் கௌரவிப்பு

editor

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!