வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே (GovPay) மூலம் அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
