உள்நாடு

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்தது

நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாகக் காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவன் தங்கத்தின் விலை இன்று (29) 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Related posts

விமான பணிப்பெண்களுக்கான அறிவிப்பு

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி!

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 13ஐ தீர்மானியுங்கள்- ரணிலுக்கு தகவல் அனுப்பிய SLPP