இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பிரதேசத்தில் “வலுவான தாக்குதல்கள்” நடத்துமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு, ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியது என்ற நெதன்யாகுவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 125 முறை மீறியதாகவும், அதில் 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது.
