அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, நாளை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அத்துடன், அது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Related posts

பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

editor

“தீபாவளிக்கு தீர்வு” ரணிலை விமர்சிக்கும் சம்பந்தன்

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை