உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஊடக உதவிச் செயலாளரின் நூல் வெளியீடு!

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஊடக உதவிச் செயலாளர் சுனில் லீலானந்த பெரேரா எழுதிய “மெணிக் அலியா சஹா தவத் அலி” (මැණික් අලියා සහ තවත් අලි) எனும் நூல் நேற்றையதினம் (27) இரத்தினபுரியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவுக்கு கையளிக்கப்பட்டது.

இதேவேலை சப்ரகமுவ மாகாண ஊடகப் பிரிவு மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன ஊடக சிறப்பு இளங்கலைப் பட்டதாரியான சுனில் லீலானந்த பெரேரா, மஹாவலி அமைச்சு மற்றும் சப்ரகமுவ மாகாண சபை உட்பட பல அமைச்சுகளில் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் சப்ரகமுவ மாகாண சபை ஊடகப் பிரிவின் செய்தி அதிகாரி, உதவிச் செயலாளர் (ஊடகம்), உள்ளிட்ட ஊடகத் துறையில் கடமையாற்றியுள்ளதுடன் இவர் பல தேசிய பத்திரிகைகளுக்கும் சிறப்புக் கட்டுரைகளை எழுதிய ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் ஆவார்.

சமூக ஊடகங்கள் மூலம் தனது ஆக்கத்திறமைகளை வெளிப்படுத்திய இவர், அதன் மூலம் பல கட்டுரைகள் மற்றும் கவிதை ஆக்கங்களை சமூகமயப்படுத்தியுள்ளார்.

சுனில் லீலானந்த பெரேரா எனும் எழுத்தாளரின் முதல் நூலான “மெணிக் அலியா சஹா தவத் அலி” எனும் நூலின் அறிவுரைகளை வழங்கிய பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கல்ல ஆவார்.

இலங்கைக் கலாச்சாரத்தின் தனித்துவமான பங்காளிகளாக இருக்கும் நாட்டிலுள்ள, வீட்டு மற்றும் வன யானைகள் குறித்து நாடு முழுவதும் இதற்கு முன் இல்லாத வகையில் உரையாடல்களும் முரண்பாடுகளும் நிலவும் ஒரு காலத்தில், அவை குறித்து மேலும் அனுதாபத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும் இவ்வாறானதொரு நூல், அத்தகைய தேவையைப்1 பூர்த்தி செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகின்றோம்.

இதன்போது சப்ரகமுவ மாகாண சபை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் டென்சில் வீரசூரிய, ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவுக்கான பொறுப்பதிகாரி சிவா ஸ்ரீதரராவ் மற்றும் ஊடப்பிரிவின் அதிகாரிகளான பாத்திய ஜயவீர, புபுது மதுசான், ஷந்து, தனுஷ்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது

வயலில் வீழ்ந்த யானை உயிருடன் மீட்பு – சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை

editor

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்