சம்மாந்துறை பொது மக்களுக்கான அன்பான வேண்டுகோளை பிரதேச சபையினர் விடுக்கின்றனர்.
எமது ஊரை சுத்தம் செய்யும் எம் சகோதர ஊழியர்களும் எம்மை போன்றே ஒரு மனிதர்கள் எனவே நீங்கள் குப்பைகளை கொடுக்கும் போது கண்ணாடி கழிவுகள், உடைந்த கண்ணாடி குப்பியோடுகள் ஆகிய கழிவுகளை ஒன்றாக சேர்த்து கொடுக்கும் போது கழிவகற்றும் ஊழியர்கள் காயங்களுக்குள்ளாகி பாதிப்பபடைகின்றனர்.
இன்று (28) சம்மாந்துறை பிரதேச சபை கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கண்ணாடி கழிவுகலந்த பையினை பெட்டியினுள் மாற்றும் போது காயமடைந்த ஊழியர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
பல தடவைகள் பொதுமக்களிடம் இது தொடர்பாக கூறியும் இதனை கண்டுகொள்ளாத நிலையிலே உள்ளனர்.
எனவே இனிவரும் காலங்களில் அதனை வேறாக பிரித்து அவர்களின் கைகளில் சொல்லி கொடுங்கள்.
-ஷாதிர் ஏ ஜப்பார்
