உள்நாடு

இலங்கையில் பாரிய அளவில் குறைந்த தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கையில் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 17 ஆம் திகதி அன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக இருந்தது.

இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,000 ரூபாவாக ஆகக் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்

கண்டி நில அதிர்வு குறித்து ஆய்வு