உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்புறத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (27) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பின் இருக்கையில் இருந்த பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அமெரிக்கத் தூதுவருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பு

editor

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் தீர்மானங்கள்

இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – ரணில் விக்கிரமசிங்க.