உலகம்

வழமைக்கு திரும்பும் காஸா – பாடசாலை வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்!

காஸாவின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரின் விளைவாக 97% பள்ளிகள் சேதமடைந்து இயங்காமல் இருந்த நிலையில், குறைந்தது 6 லட்சம் குழந்தைகள் முறையான கல்வியின்றி காஸாவில் தவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அங்கு போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், காஸா நகரின் அருகிலுள்ள ஐ.நாவின் UNRWA பாடசாலையில் மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

நீண்ட காலமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடமாக மாறிய அல் – ராஜி பாடசாலையிலேயே தற்போது மீண்டும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தொடங்கியுள்ளனர்.

Related posts

சீனாவுக்கு எதிராக எழுதிய Jimmy Lai கைது

இந்தியாவில் 2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு