கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பரீதா மர ஆலை வீதியானது 2 ஆம், 3ஆம் வட்டாரங்கள் ஒன்றிணைந்த வீதியாகும்.
அந்த வீதி இருள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவ் வீதி வழியாக செல்வதில் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், அவ்வீதி ஆற்றங்கரையை அண்மித்ததாகவுள்ளதால் அண்மைக் காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரண்டு வட்டாரங்களை உள்ளடக்கியதாக அவ் வீதி அமைந்துள்ளது.
2ஆம் வட்டாரத்தை பிரதிநிதுத்துவப்படுத்தி
தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் அவர்களும், 3 ஆம் வட்டாரத்தை பிரதிநிதுத்துவப்படுத்தி உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் அவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட்டு வருகின்றனர்.
எனவே, இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து அவ் வீதிக்கு மின் விளக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
