அநுராதபுரம், மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிமருந்துகள் நேற்று சனிக்கிழமை (25) மதவாச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால், கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிமருந்துகளை அந்த இடத்திற்கு கொண்டுவந்த நபர்களின் அடையாளத்தை கண்டறிய, மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
