உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மற்றொரு சந்தேகநபர் கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் வைத்து வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related posts

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்க எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

உடன் அமுலாகும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய்