உள்நாடு

வாட்ஸ்அப் குழு தொடர்பில் கல்வி அமைச்சு அவசர அறிவிப்பு

ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்காக “புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி கவுன்சில்” என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட குழு ஒரு வாட்ஸ்அப் குழு வலையமைப்பைப் பராமரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் குழு வலையமைப்பு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தால் பராமரிக்கப்படவில்லை என்றும், அதன் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமைச்சு எந்தப் பொறுப்பையும் ஏற்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தையும் புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தையும் சங்கடப்படுத்தும் நோக்கில் செயற்படும் இதுபோன்ற போலி குழுக்களால் ஏமாற வேண்டாம் என்றும் அமைச்சு எச்சரிக்கிறது.

Related posts

பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட குழுக்கள்

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் – பிரதமர் ஹரிணி

editor

ஜும்மா, தராவீஹ் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்