தாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி அவரது 93ஆவது வயதில் காலமானார்.
இவர் தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயாவார்.
2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (24) பேங்கொக்கில் உள்ள வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
