உள்நாடு

ரஜரட்ட ரெஜிண ரயிலில் தீ விபத்து

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் தெரிவிக்கையில், தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு வேறு ஒரு என்ஜின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்தது.

இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, அந்த ரயில் புறப்படுவது 2 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமானதுடன், காலை 7.30 மணியளவில் மீண்டும் பெலியத்தையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

Related posts

இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

editor

UNP சிரேஷ்ட உறுப்பினர்களே தேர்தலுக்கு தயாராகுங்கள்! – ஜனாதிபதி ரணில்