துபாயில் மறைந்து கொண்டு நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹைபிரிட் சுரங்கா’வின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய சந்தேக நபரை காலி மாவட்ட குற்றப்பிரிவு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ரமேஷ் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் கொலைக் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலியின் போபேயில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்,
மேலும் அவரிடமிருந்து 100 கிராம் 45 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, இலங்கையில் ‘ஹைபிரிட் சுரங்காவின் போதைப்பொருள் வலையமைப்பின் நடவடிக்கைகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
