உள்நாடு

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது!

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் பங்கேற்புடன் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா – 2025 இன்று (23) வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தம்மிக்க பட்டபெந்தி, சுனில் ஹந்துன்னெத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுயாதீன ஊடகவியலாளராக தமிழன் பத்திரிகையில் இவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற சுற்றாடல் கட்டுரைகளுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த வருடமும் ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் சிறப்பு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு மாகாணத்தின் உயர்தரப் பரீட்சையில் திறமை செலுத்திய மாணவர்களை ஜனாதிபதி நிதியம்கௌரவித்தது

editor

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

கோபா தலைவராக கபீர்