உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி கோர விபத்து – 17 வயதுடைய பாடசாலை மாணவன் பலி

பண்டாரகம பொலிஸ் பிரிவின் பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் பிரவேசிக்க சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியன பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் என தெரியவந்துள்ளது.

சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பெக்கோ சமனின் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

editor

தாதியர் சங்கத்தினால் அரசுக்கு காலக்கெடு

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

editor