அரசியல்உள்நாடு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களோடு சஜித் பிரேமதாச பங்கேற்றார்

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர் குழாம் அங்கத்தவர்களால் வடிவமைக்கப்பட்ட மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி என்பன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர் குழாம் அங்கத்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்றிருந்தனர்.

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில், விழிப்புணர்வூட்டல் ஊடாக இதில் தெளிவை ஏற்படுத்துதல், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மரியாதை செலுத்துதல் மற்றும் அனைவருக்கும் சமமான பிரவேச அணுகலுக்காக உலகளாவிய உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டல் நடத்தப்பட்டு வருகின்றன.

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் – ஒரே பார்வையில்

editor

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு