அரசியல்உள்நாடு

நாடு முழுவதும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச

அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் நில்வலா அணைக்கட்டு பிரச்சினை காரணமாக அதிக அளவிலான விவசாய வயல் நிலங்கள் சேதமடையப் பார்க்கின்றன.

எமக்கு கிடைக்கும் தகவல்களின் படி இந்த அனர்த்த நிலையால், 3 மனித உயிர்கள் பலியாகியுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நாமும் தயார்.

கடந்த காலங்களில், மக்கள் விடுதலை முன்னணியால் ரெட் ஸ்டார் படை போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக, அரசாங்கத்தாலும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுங்கள்.

விசேடமாக இந்த அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு எமது (எதிர்க்கட்சியின்) பங்களிப்பையும் பெற்றுத் தருவோம்.

எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பாரக்கப்படும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை உடனடியாக நாளை காலையில் அல்லது இன்றைய தினத்திலேனும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

Related posts

நண்பர்களுக்கு அரச காணிகளை வழங்கியதாக சமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு!

editor

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”

மஹிந்தவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்.