உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு!

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார்.

ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த இரும்பு சீமாட்டி என அறியப்படும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரட் தட்சரின் அரசியல் ரசிகையாக கருதப்படுகின்றார்.

Related posts

நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

பிரான்ஸில் இதுவரை 22,245 உயிரிழப்புகள்

காசாவில் பெருநாள் தினத்திலும் இஸ்ரேல் கடும் தாக்குதல் – 20 பேர் பலி – புதிய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கம்

editor