உள்நாடு

கன மழை – வெள்ள எச்சரிக்கை நீடிக்கப்பட்டது

மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைகளின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன, நீர்வளவியல் பேரிடர்முகாமைத்துவப் பணிப்பாளர் சூரிய பண்டார தெரிவித்தார்.

பத்தேகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது, அதிகபட்சமாக பத்தேகமவில் 172 மி.மீ மழை பெய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

களு மற்றும் களனி ஆறுகள், அத்தனகலு ஓயா மற்றும் கிரிந்தி ஓயா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, களனி, களு, ஜின், அத்தனகலு மற்றும் நில்வலா நதிப் மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும், அந்தப் பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் அனர்த்த நிலைமைகள் பதிவாகக்கூடும் என்றும் நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கிரிந்தி ஓயா மற்றும் லுணுகம்வெஹர நீர்த்தேக்கங்களுக்கு கணிசமான அளவு நீர் கிடைத்துள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Related posts

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

பாஸ்மதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

editor

சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா!