உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் சுமார் 4 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், வீட்டின் மதில் மற்றும் ஜன்னல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு

அரச சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ய விசேட குழு

தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை