உள்நாடு

இஷாரா செவ்வந்திக்கு உதவிய நால்வரும் விளக்கமறியலில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய மதுகம- வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது மனைவியின் தாயார், மதுகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உதவியாளர் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார் நேற்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களும் இன்று (20) கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பாரபட்சமின்றி நடந்து கொள்வார் – சஜித் பிரேமதாச நம்பிக்கை

editor

மேலும் 354 பேர் பூரணமாக குணம்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்