உலகம்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் அமுல்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லிபியத் தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாகப் பெற சதி செய்ததற்காக பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு அண்மையில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடாபியிடமிருந்து பெறப்பட்ட நிதியை 2007 தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

எமது தாக்குதல் கத்தாருக்கு எதிரானது இல்லை – ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு

editor

அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி

செல்லப் பிராணி நாய்க்கு MonkeyPox