ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு லேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஐம்பது ஏக்கர் காணியில் முந்திரிகை, கிளிசரியா, மகோகனி போன்ற பயன்தரும் மரங்களை நடும் திட்டத்தில் முதற்கட்டமாக ஐந்து ஏக்கர் காணியில் முந்திரிகை உற்பத்தி செய்யும் திட்டத்தில் முந்திரிகை கன்றுகளை நடும் திட்டம் நேற்று சனிக்கிழமை (18.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடதாசி ஆலையின் தவிசாளரும் பொறியலாளருமான ஆர்.எம்.எஸ்.புபாலி ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும பொறியலாளர்களுமான டபள்யூ. ஏ. குலதிலக, டபள்யூ.ஏ.நிஹால் பெரேரா, கே.ஜினதாச, என்.ஏ.நந்தசேன, கடதாசி ஆலையின் மனிதவள முகாமையாளர் காயத்திரி எக்கநாயக்க, வாழைச்சேனை கடதாசி ஆலையின் பிரதம இணைப்பதிகாரி எஸ்.அம்பிகாவதி மற்றும் கடதாசி ஆலையின் உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
