உள்நாடு

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கம்பஹா பபா வழங்கிய தகவல் – பெருமளவான தோட்டாக்கள் மீட்பு

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘கம்பஹா பபா’ என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்படும் கம்பஹா பபா நேற்று (18) பேலியகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின்படி, கந்தானை – கெரவலப்பிட்டி அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வடிகால் கட்டமைப்பில் இருந்து சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த தோட்டாக்கள் கெஹெல்பத்தர பத்மேவினால் தமக்கு வழங்கப்பட்டதாக அவர் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தோட்டாக்களை வெலிசறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

editor

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

இதுவரையிலான கொரோனா பலி எண்ணிக்கை 586