உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பதிவாகும்.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு

editor

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும – மன்னாரில் ஜனாதிபதி அநுர | வீடியோ

editor

நாடு முழுவதும் சஜித்தின் அலை, வெற்றியைத் தடுக்கவே முடியாது – மானிப்பாய் கூட்டத்தில் தலைவர் ரிஷாட்

editor