உள்நாடுபிராந்தியம்

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் போதைப்பொருள் கடத்திய சாரதி கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபருமே இவ்வாறு அம்பாறை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (18) காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் கைதானதுடன் பஸ்ஸூம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் இவ்வாறு சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தி வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைதான இரண்டு சந்தேக நபர்களும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் அடையாளம்

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் – அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு

editor