வாகன விபத்துச் சம்பவத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை கொழும்பு வீதி புனாணை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வியாபார நடவடிக்கைக்காக சென்ற பட்டா ரக வாகனம் ஓட்டமாவடி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவர் பட்டா ரக வாகனத்தில் மோதி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்